Sunday, April 24, 2011


ஆனந்தத்தை
ஆக்கிரமித்த
ஆனந்தியே...

அன்போடு
அரவணைக்க
ஆசைதான்.

அப்போது - உன்
அதரங்கள்
அணைத்தால்...

அந்நாள்
எந்நாள் - அது என்
பொன்நாள்

கண்ணால்
நீ
அழைத்தால்
நான்
மனதால்
துள்ளுவேன்
இன்பத்தால்

உன்னை
அள்ளித்தான்
கிள்ளித்தான்
உன்னுடன்
துள்ளித்தான்...

ஆஹா!
இதை
எண்ணித்தான்

என்
மனம்தான்
கொண்டாடும்
பின்
திண்டாடும்

நீ
கன்னித்தான்
என்
கனவு கன்னிதான்.
என்றும்தான்
நீ என்
அருகில்தான்.

இதைச் சொல்லித்தான்
உனைச்
சுற்றித்தான்
தினம் தினம்
வரும்
என் நெஞ்சம்தான்.

Saturday, April 16, 2011


என் உயிர்
உன்னிடத்தில்...

உன் அழகையும்
வனப்பையும்
நினைத்தாலே
பி.பி. ஏறுகிறது...

என்னைவிட்டு
நீ பிரிந்துவிடுவாயோ..
எனக்கு
ஹார்ட் அட்டாக் வரும்...

உன் நினைவால்
பசியில்லை
சாப்பிட முடியவில்லை
அல்சர்...

உன்னை
நினைத்து நினைத்தே
உடல் மெலிந்தேன்
இரத்த சோகை...

உன்னுடன்
ஊர் சுற்றிய காலங்களில்
நிறைய ஐஸ் க்ரீம்
சாப்பிட்டது - ஜலதோஷம்
சைனஸ்...

உன்னுடன் இணைந்தேன்
சந்தோஷம்
உடல் பருமன்
கொலஸ்ட்ரால்

ஆம்...
என் உயிர்
உன்னிடத்தில்...